
இந்தி நடிகையான ஜியாகான் சென்ற 2013-ஆம் வருடம் மும்பையிலுள்ள தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து இவர் கொல்லப்பட்டதாக ஜியாகான் தாய் ராபியா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக அவரது காதலரும் நடிகருமான சூரத் பஞ்சோலி மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு மும்பையிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் ஜியாகான் மரண வழக்கில் சிபிஐ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் சூரத் பஞ்சோலியை விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் சூரத் பஞ்சோலி விடுவிக்கப்படுவதாகவும், அவர் குற்றம் செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் அறிவித்தது.