தெலுங்கானா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா. இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய விஷயம் தெலுங்கு திரையுலகில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஆதரவு கொடுத்து பல்வேறு திரை பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது முன்னாள் முதல்வரின் மகனும் முன்னாள் அமைச்சருமான கேடி ராமராவ் சமந்தா மீது ஆசை கொண்டதாகவும் அவருடைய ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா உட்பட அவருடைய மொத்த குடும்பத்தினரும் சமந்தாவை கட்டாயப்படுத்தியதாகவும் அதனால்தான் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாகவும் கூறினார்.

இவர்களின் விவாகரத்துக்கு கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறிய நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகை சமந்தா, நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமைச்சர் மீது நாகார்ஜுனா கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்த சம்பவத்திற்கு கன்னடம் தெரிவித்ததோடு ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இப்படி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்‌. இதே போன்ற நடிகர்கள் அல்லு அர்ஜுன், நானி, நடிகர் சிரஞ்சீவி உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கட்டணம் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக நடிகர் நானி எப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனமான விஷயத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பார்க்கும்போது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. ஒரு மதிப்புக்குரிய பொறுப்பில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்பு இப்படி ஆதாரம் இல்லாத குப்பைகளை பேசுவது சரி இல்லை. நம்முடைய சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும் இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சமந்தாவுக்கு ஆதரவு கொடுத்து தெலுங்கு திரை உலக பிரபலங்கள் பலரும் அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.