தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குறித்து இணையத்தில் கிசுகிசு பரவி வருகிறது. அதன்படி, பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே அவரது படங்களில் பணியாற்றிய நடிகை காயத்ரி நாயகியாக இருந்தால் நன்றாக இருக்கும் என ஜிவி பிரகாஷ் கூறியுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நடிகை காயத்ரி ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார். இதனால், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகை காயத்ரி உறவில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.