
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் வரும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன், தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய பெருங்கனவை நனவாக்கிய வெற்றி நாயகன், தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்! என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில்நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு நாள் முன்பாகவே சீமான் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இந்த வாழ்த்துக்கு பின்னால் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்று நெட்டிசன்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.
தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும்,
நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும்,
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்,
தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய… pic.twitter.com/FUUuDkU1b8— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) February 16, 2025