பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய்க்கு நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராகத்தான் இருக்கிறது. இருப்பினும் நீட் தேர்வுக்கு எதிராக பேசுபவர்கள் அதற்கான புள்ளி விவரங்களை சரியாக வைத்துக் கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.

நடிகர் விஜய் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது பாஜக மட்டும் தனித்திருக்கும். திமுக சார்ந்த கொள்கையுடன்‌ நடிகர் விஜய் பேசினால் பாஜகவின் வளர்ச்சிக்கு அது உதவும். அதன்பிறகு நீட் தேர்வு தொடர்பான தரவுகளை வைத்துக்கொண்டு நடிகர் விஜய் பேசினால் மிகவும் நல்லது. அண்ணாமலை இல்லாவிட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என்பது பகல் கனவு. மேலும் அண்ணாமலை இல்லாவிட்டாலும் வேறு யாராவது வந்து பாஜகவை வளர்ப்பார்கள் என்று கூறினார்.