மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நூற்றாண்டு நினைவு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மத்திய அரசின் சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை கடந்த 18ஆம் தேதி வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் திமுக சார்பில் அந்த நாணயத்தை வீட்டில் சென்று நேரடியாக வழங்கிய வந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரான பூச்சி எஸ்.முருகன் அவரது வீட்டிற்கு சென்று நேரில் வழங்கி உள்ளார்.

இதைத் தொடர்ந்து கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயம் ஒன்று 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மட்டும் சுமார் 500 நாணயங்கள் விற்கப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயம் ரூபாய் 50 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.