தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியான நிலையில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பால முரளி மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் உலகம் முழுவதும் 150 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்த நிலையில், ஆஸ்கார் நூலகத்திற்கும் ராயன் கதை தேர்வானது. இந்நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். மேலும் அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ராயன் வெளியாகிறது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.