தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. அதாவது கன்னடம் தமிழ் மொழியிலிருந்து பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என கூறிவிட்டனர்.

இந்நிலையில் இன்று நடிகர் சிவராஜ்குமார் தன்னுடைய 40-வது பிறந்தநாளை கொண்டாட நிலையில் அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் சிவராஜ்குமார் தனக்கு ஒரு மகனை போன்றவர் எனவும் அவருக்கு நான் சித்தப்பா போன்றவர் எனவும் கூறியதோடு கன்னட மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் இதோ அந்த வீடியோ