
பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனைத்தொடர்ந்து மற்றொரு துயரச் செய்தியாக நடிகர் சரத்பாபு காலமானதாக அனைத்து செய்தி சேனல்களிலும் தகவல் வெளியாகி பரவி வருகிறது. மேலும், பிரபல நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இவருடைய இறப்பிற்கு இரங்கலை பதிவிட்டனர்.
இந்நிலையில், சரத்பாபுவின் சகோதரி, உடல்நலக் குறைவால் ஐசியு-வில் சிகிச்சை பெற்றுவந்த சரத்பாபு, தற்போது சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வதந்தியாக தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ள்ளார். மேலும், செய்தி நிறுவனங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.