நகைக்கடன் பாதுகாப்பான கடன் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. உங்கள் நகைக்கடனை மிகவும் குறைந்த வட்டியில் பெற பல விருப்பங்கள் இருக்கிறது. கடன் வாங்கும் நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தினை வழங்கக்கூடிய வங்கியை (அ) நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். கடன் தொகையில் வட்டி விகிதமானது ஒரு முக்கியமான காரணியாக இருப்பின், நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய பிற காரணிகளும் இருக்கிறது. கடனுக்குரிய கூடுதல் கட்டணங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் என்பவையும் இவற்றில் அடங்கும்.

கடன் வழங்குபவர் நகைக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பி செலுத்தும் நிபந்தனைகளை நிர்ணயித்தவுடன், நீங்கள் எப்போதும் வட்டி விகிதத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம். அதோடு உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் வலுவான திருப்பிச் செலுத்தும் வரலாறு இருப்பின், நகைக் கடன் வட்டி விகிதத்தில் சிறந்த சலுகையை பெற அந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை மட்டுமே செலுத்த திட்டமிட்டால், வட்டி தொகையை மட்டும் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். கடன்காலம் முடிந்த பிறகு அசல் தொகையை மொத்தமாக செலுத்தலாம்.