டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டால் உலகை புவி வெப்பமயமாதல் அச்சுறுத்தி வருகிறது. இந்த  நிலையில் உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவும் சுற்று சூழலுக்கு உகந்த அடிப்படையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கத்துடன் “Hydrogen for Heritage” திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டு இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

அதாவது, டீசல் என்ஜின்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிப் பொருள் செல்களை இணைத்து இரயில்வே துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு இத்திட்டம் நோக்கமாக இருக்கிறது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுபாட்டை குறைக்கும் வகையில் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த இத்திட்டம் ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தை வடக்கு ரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் பிரிவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.