
ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் முறையே, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.
தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக வழங்கப்படும். தங்க நகையின் தூய்மை தன்மை குறித்து வங்கிய இடம் சான்றிதழ் பெறுவது கட்டாயம். குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகை கடன் கொடுக்கப்படும்.
நகை 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். வெள்ளி நகைகளுக்கும் நகை கடன் பெற்றுக் கொள்ளலாம். தனிநபர் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டும்தான் அடகு வைக்க இயலும். நகை கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நகை கடன் வாங்கியவர் அந்த கடனை திருப்பி செலுத்திய ஏழு வேலை நாட்களில் நகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகள் ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.