2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK), மக்கள் வழங்கிய தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாக அறிவித்துள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்து 11 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாத சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் இந்த உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். “ஜனநாயகக் கடமையாற்றி, மக்கள் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவணங்கி ஏற்கிறது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 4, 2026
“>
2026 பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அமமுக மனதார ஏற்றுக் கொள்கிறது. மேலும், தார்மீக அடிப்படையில் எம் கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னடைவைச் சந்தித்தாலும் சோர்ந்து போகாமல், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்ற தொனியிலான அவரது இந்தப் பதிவு தொண்டர்களிடையே ஒருவித அமைதியையும், அடுத்த கட்டப் பணிக்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
