மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல, நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடன்களையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 முதல் 12 விழுக்காடு வட்டியுடன் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெறலாம்.

தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடனுக்கான செயலாக்கக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. பொதுத்துறை வங்கிகள் தவிர, கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளில் இந்தக் கடனைப் பெறலாம்.