சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லித்திஷா ஸ்ரீ என்ற 2 வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை வீட்டில் இருந்த ஒரு கேரட் துண்டை சாப்பிட்ட போது அது தொண்டையில் சிக்கி மூச்சு திணறி மயங்கி விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ‌2 மணி நேரமாக சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் பின்னர் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குழந்தையின் உறவினர்கள் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டு நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.