நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாட உள்ள நிலையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தற்போது விமான கட்டணமும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு 4301 ரூபாயிலிருந்து 10,790 ரூபாய் ஆகவும், மதுரைக்கு 4063 ரூபாயிலிருந்து 11 ஆயிரத்து 716 ரூபாய் ஆகவும், திருச்சிக்கு 7192 ரூபாயாகவும், கோவைக்கு 5,349 ரூபாய் ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.