ஆப்கானிஸ்தான் நாட்டில் பாசியாபாத் பகுதியில் இன்று காலை 10.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

மேலும் இது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உலக நாடுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்துடனே இருக்கின்றனர்.