ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ஒரு நல்லுறவு இருந்து வருகின்றது. இந்த உறவை மேம்படுத்துவதற்காக ஈரான் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அபுதாபிக்கு வருகை புரிந்துள்ளார். இவரை அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமீரக துணை பிரதமரான ஷேக் மன்சூர் பின் ஜாஹித் அவர்கள் வரவேற்றுள்ளார். இதனை அடுத்து அமீரக அதிபரும் ஈராக் நாட்டு பிரதமரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இரு தரப்பு உறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டு பிரதமரை துபாய் ஜாபில் அரண்மனையில் வைத்து அமீரகத்தின் துணை அதிபரான மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்துமே அவர்கள் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் ஆர்வமுள்ள துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.