விடுதலைப் போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூரு மெஜஸ்டிக் கோடே சர்க்கிலில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு சித்தராமையா பூ தூவி கொண்டிருந்தபோது பின்னால் நின்ற நபர் பேச முயற்சித்தார். தொடர்ந்து அந்த நபர் பேச முயற்சித்துக் கொண்டிருந்ததால் பூ தூவி முடித்ததும் சித்தராமையா என்ன என கேட்டார். மீன்டும் அந்த நபர் ஏதோ கூற சித்தராமையா அங்கிருந்து புறப்பட முயற்சித்தார்.

அந்த நபர் தொடர்ந்து ஏதோ சித்திராமையாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த சித்தராமையா அந்த நபரை அடிப்பதற்கு கையை ஓங்கி உள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.