சமீபகாலமாகவே நிதிச்சுமையை குறைக்க மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை துறைகளில் இருந்து ஆட்குறைப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையில், மெட்டா, அமேசான், ட்விட்டர் போன்ற மாபெரும் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஐடி, ஆட்டோ மொபைல் துறை நிறுவனங்கள் பலவும் சிறய அளவிலான பணிநீக்கம் செய்து வருகின்றன.

2024 இல் கூட, தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் தொடர்கின்றன. ஆட்குறைப்புகள் அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், மெட்டா பிளாட்ஃபார்ம் போன்ற பெரிய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பட்டியலில் உள்ளன. FYI இன் நிறுவனர் ரோஜர் லீ கூறுகையில், பொருளாதார நிலைகளே வேலை குறைப்புக்கு முக்கிய காரணம். AI அடிப்படையிலான வேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.