துருக்கி, சிரியா நாடுகளில் கடந்த திங்கட்கிழமை அன்று ரிக்டர் அளவில் 7.8, 7.6 அளவில் இரு பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. மேலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தால் தொடர்ந்து உயரும் உயிர்பலி தற்போது 34,000ஐ கடந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கின்றனர். இதனால் உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.