உலகின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Yahoo நிறுவனமும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த வாரம் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் 12 சதவீதமாகும். இந்நிலையில் இந்த வருடத்தின் முடிவுக்குள் 20 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.