
சமீப காலமாகவே உணவுகளில் அருவருக்கத்தக்க பொருட்கள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு ஐஸ்கிரீமில் மனித விரல், சாக்லெட்டில் செத்த எலி என செய்திகள் வெளியானது. அந்த வரிசையில் தற்போது சிப்ஸ் பாக்கெட்டுக்குள் தவளை கிடந்துள்ளது.
குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாஸ்மின் படேல் என்பவர் நேற்று தன்னுடைய 4 வயது குழந்தைக்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார். அதில், இறந்த தவளை ஒன்று கிடந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்த புகார் கொடுத்த நிலையில் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.