நெல்சன் டைரக்டில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். பல்வேறு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில் இப்போது ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் விநாயகன் டப்பிங் பேசி வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இப்போது ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருவதால் அப்படத்தை முடித்துவிட்டு தனக்கான டப்பிங்கை பேசுவார் என கூறப்படுகிறது. அதோடு இப்படத்துக்காக அனிருத் இசையில் உருவாகியுள்ள 2 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.