கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசை சிறப்பாக நடைபெறும். நேற்று அதிகாலை கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு அபிஷேகமும், உச்சிக்கால தீபாராதனையும் நடத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு வெள்ளி கலை மான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.

பின்னர் நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. வருடத்தில் ஐந்து முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.