நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 1404 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்டால் cVIGIL என்ற செயலி மூலம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை 109.76 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மார்ச் 31ம் தேதி வரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  cVIGIL செயலி மூலம் பெறப்பட்ட 1822 புகார்களில் 1803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.