தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான உறியடி விஜயகுமார் தற்போது எலெக்சன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ரீத்தி‌ அஸ்ராணி, ரிச்சா ஜோசி, வத்திக்குச்சி திலீபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வருகின்ற மே மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது எலக்சன் படத்தின் டிரைலரை  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.