
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். தற்போது சந்திரபாபு நாயுடு அதிக குழந்தைகளை தென்னிந்திய மக்கள் பெற்றெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அதிக குழந்தைகளை மக்கள் பெற்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க முன் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு மட்டும் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றாலும் 2024 ஆம் ஆண்டில் ஓரளவு மக்கள் தொகை சரியான அளவில் இருந்தாலும் தென்னிந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைவதாக கூறப்படுவதால் தற்போது முதல்வர் இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.