இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை விளங்கி வருகிறது. ஆதார் அட்டை ஒன்றை மட்டும் வைத்து தனிப்பட்ட நபரின் முழு விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் அனைத்தையும் அரசால் கண்காணிக்க முடியும். இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் ஓட்டு போடுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்ற செய்தி மக்களுடைய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆனது முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், ஆதார் அட்டை இல்லாதவர்கள்  வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பிற ஆவணங்களை வைத்து ஓட்டு போடலாம் என்றும் தெரிவித்துள்ளது.