
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு முன்னதாக செப்டம்பர் 23 இல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் மாநாட்டுக்கான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மாநாட்டுக்கான தேதியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என விஜய் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
இந்த மாநாடு நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பாதையை உருவாக்கவும் என்று சூளுரைத்த அவர் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த மண்ணின் மைந்தனான எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.