தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அண்ணாமலை அவர்கள் தொடங்கிய ‘WE THE LEADERS’ அமைப்பின் சார்பாக, அவரது தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டின் முதல் கட்ட நிகழ்வு வரும் ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. அண்ணாமலையின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் இந்த மாநாட்டில், போதைப்பொருள் ஒழிப்புக்கான முக்கிய தீர்மானங்களும், விழிப்புணர்வுப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

​பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் கட்ட பெரும் பொது நிகழ்ச்சி வரும் ஜூலை 26-ஆம் தேதி ஆன்மீக நகரான திருச்செந்தூரில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘WE THE LEADERS’ அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்புக்கான அலையை உருவாக்கும் நோக்கில் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மாநாடுகள், பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் தற்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.