திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தெருநாயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து தெரு நாய் கடித்ததில் பரத் என்ற சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தெருக்களில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.