கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி தன் தோழிகளோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றார். இவர் கார் ஓட்டுநர். இவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பிறகு மாரியப்பனை பிடித்து தர்ம அடி கொடுத்த பெற்றோர் அவரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பெற்றோர் கொடுத்த  புகாரின் பேரில் மாரியப்பனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.