
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சின்னசாமி மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. ப்ளே ஆஃப் தகுதியை இழந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே சென்னை ரசிகர்களை பெங்களூரு ரசிகர்கள் வரம்பு மீறி வம்பு இழுத்து விட்டனர்.
அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் வென்று குவாலிஃபயர் போட்டியில் ஆட சென்னை தான் வரவேண்டும், அப்போது தகுந்த வரவேற்பு கொடுக்கப்படும் என்ற சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள். ஆர் சி பி அணியும் அவர்களுடைய ரசிகர்களும் தவறான இடத்தில் கை வைத்து விட்டதாகவும் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து தரப்படும் என்றும் கூறி வருகிறார்கள்.