தென்காசி பஜார் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திலேயே அரசு வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி என்பவர் இன்று (டிச.03, 2025) மர்ம நபர்களால் வெட்டிக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக இரத்தப்போக்குடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைவெறித் தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள், சம்பவ இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாகத் தென்காசி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் கொ*ல#Tenkasi #Advocate #GovtAdvocate #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/vVmY4RNRQn
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) December 3, 2025
“>
இந்தக் கொலையின் பின்னணி என்ன, கொலையாளிகள் யார் என்பது குறித்துத் தென்காசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அவர்களைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டுள்ளனர்.
