கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு இழந்த வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுற்றுலா வேனின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.