அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி நேரில் வந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை நோக்கி ‘துரோகி’ என கத்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே திடீர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் வயது மூப்பு காரணமாக அண்மையில் காலமான நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக எஸ்பி வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இரங்கல் தெரிவிக்க வந்தபோது கூட்டத்தில் ஒருவர் துரோகி என கத்தியதால் பரபரப்பு#SPVelumani | #ADMK | #Pollachi pic.twitter.com/A0muOiFCtK
— PttvOnlinenews (@PttvNewsX) June 2, 2026
அவர் கூட்டத்திற்குள் நுழைந்த அந்த காரசாரமான சூழ்நிலையில், அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென எஸ்பி வேலுமணியை நோக்கி ‘துரோகி’ என்று உரத்த குரலில் கத்தியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்களிடையே திடீரென ஒரு சலசலப்பும், என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு பதற்றமான சூழலும் உருவானது. அதிமுகவின் உள்கட்சி அதிருப்திகள் இப்படி ஒரு துக்க நிகழ்விலும் வெளிப்பட்டிருப்பது, கொங்கு மண்டல அதிமுகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
