
திமுக அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு தற்போதைய முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வராக இருக்கும் உதயநிதிக்கு பிறகு அவரது மகன் இன்பநிதி அரசியலுக்கு வருவார் என எதிர்க் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி வெளிநாட்டில் படித்தவர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை நிற்க வைத்ததாக தகவல் பரவியது. அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் எழுந்து நின்றதால் எழுந்து நின்றேன். மற்றபடி யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இன்பநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் Alorha coming soon என பதிவிட்டுள்ளார். ஒரு clothing brand -ஐ இன்பநிதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதோ அந்த பதிவு…
