ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கிமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

அண்மையில் துணிவு படத்தின் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என படக்குழு அறிவித்திருக்கிறது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.