பொதுவாகவே குளிர்காலங்களில் சளி மற்றும் இருமல் பிரச்சனை என்பது பலருக்கும் இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் உள்ள மசாலா பொருட்கள் மட்டுமே போதும். கசாயம், ரசம் மற்றும் காரக் குழம்பு இப்படியான உணவுகளை அடிக்கடி செய்து சாப்பிட்டாலே போதுமானது. இது தொற்றுகளை குறைத்து உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேசமயம் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்கும் உணவுப் பொருள்கள் என்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.

இஞ்சி – 1துண்டு
துளசி- அரை கைப்பிடி
தேன் – மூன்று ஸ்பூன்

செய்முறை:

முதலில் இஞ்சியை நன்றாக இடித்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனைப் போலவே துளசியையும் இடித்து அதன் சாற்றைப் பிழிந்து தனியாக எடுக்க வேண்டும். இதற்கு காட்டன் துணியை பயன்படுத்துவது சிறந்தது. பிறகு இரண்டு சாற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் தேன் கலந்து அப்படியே கரைத்தபடி குடித்து விட வேண்டும்.

குழந்தைகளின் வயதிற்கு ஏற்றது போல இதனை தகுந்த அளவுகளில் கொடுக்க வேண்டும்.