
மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவ் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சாத் பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன்படி 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு நாட்டின் கிழக்கு பகுதிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் வடக்கு ரயில்வே கணிசமான அளவில் ரயில்களை இயக்கும் என்றும், 2 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வருடம் 4500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 7000 சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதோடு பயணிகள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.