தமிழக அரசு  பேருந்துகள் மூலமாக 1.8 கோடிக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்தார்கள். தமிழகத்தின் பல நகரங்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பண்டிகை காலங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

நவ.10-ந்தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று (புதன்) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். நவ.11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்