
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2 மணிக்கு நெல்லை வந்தடையும். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னையை அடையும். அதே தினம் பிற்பகலில் 2.50 மணிக்கு இயங்கும் வந்தே பாரத் ரயிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.