நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், அறிவுரைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தீபாவளி அன்று காலை 6 – 7 மணி வரையும், இரவு 7- 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பாதுகாப்பான முறையில் பிறருக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்கவும், ராக்கெட் போன்ற பட்டாசுகளை குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.