தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களின் திறனை கண்டறிய அக்.7ல் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறும் 1,000 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் 10 மாதங்களுக்கு மாதம் ₹1,000 வீதம் வழங்கப்படும்.