பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாபுஜி (79) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காளி, கர்ஜனை, பிரபுதேவாவின் சுயவரம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் #RipLegendBabuji என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.