சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட விவசாயிகள் உட்பட 20 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம். திருவண்ணாமலையில் கைதான 20 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார் நீதிபதி மதுசூதனன். அருள் என்பவர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 19 விவசாயிகள் வேலூர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. செய்யாறில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில் 7  பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு பின்னர் 6  பேர் மீது வாபஸ் பெறப்பட்டது.