தமிழகத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதன் மூலமாக நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் வசிப்பவர்களும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி பிற மாநிலத்தவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்காமல் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் வட மாநிலத்தவர்களுக்கு ரேஷனில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஒதுக்கீடு வழங்குவதில்லை என்று புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் கூறுகையில், பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை கேட்டால் மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்று தனியாக பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று ஊழியர்கள் சொல்லக்கூடாது . ஒரு ரேஷன் கடையில் கார்டுதாரர்கள் அனைவருமே பொருட்கள் வாங்குவதில்லை. எழுபத்தைந்து சதவீதம் மட்டுமே வாங்குவதால், 25% பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.