திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 1084 சிறப்பு பேருந்துகள் ஏகப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 23ஆம் தேதி இன்று 682 சிறப்பு பேருந்துகளும், பிப்ரவரி 24ஆம் தேதி 502 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

இன்று சென்னை கிளாம்பக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40, புதுச்சேரியில் இருந்து 30, பெங்களூரில் இருந்து 20, வேலூரில் இருந்து 55 என ஒவ்வொரு ஊர்களிலும் தனித்தனியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கவும் பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் தேவையான அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.