விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் அதிலிருந்து தொடர்ந்து  வெளியிடும் அறிக்கைகளும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அவர் சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது மது ஒழிப்பு மாநாடு நடைபெற்ற போது மேடையில் திமுகவை பற்றி பேசினால் அவர்களை அவமானப்படுத்துவது போன்றது என்று திருமாவளவன் அர்ஜுனாவிடம் கூறியுள்ளார். அந்த சமயத்தில் திருமாவளவன் மேடையில் பேசிக்கொண்டிருக்கும். போது அங்கிருந்த இரு திமுக கட்சி தலைவர்கள் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே எழுந்து போய் விட்டார்கள். இதைப் பார்த்து ஆதவ் அர்ஜுனாவுக்கு மிகவும் கோபம் வந்த நிலையில் இது பற்றி திருமாவளவனிடம் அவர் கூற அவரோ பொறுமையா இரு என்று கூறியுள்ளார். இந்த தகவலை அவர் பேட்டியில் கூறிய நிலையில் எத்தனை நாட்கள் தான் பெருமையாக இருக்க முடியும் மனதில் பட்ட கருத்துக்களை பேச வேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு பேசியதாக கூறினார்.

முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு மன்னாராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் 2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றும் கூறினார். அதன் பிறகு தமிழ்நாட்டில் ஏற்கனவே பாஜகவை ஒழித்த நிலையில் அடுத்தது திமுக தான் என்றும் கண்டிப்பாக விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்றும் கூறினார். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு எதிராக பேசியதாகவும் விஜய்க்கு ஆதரவாக பேசியதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில் கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக திருமாவளவன் அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் அவர் அமைச்சர் வேலு திருமாவளவனிடம் விஜய் கலந்து கொள்ளும்  மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று கூறியதாக அர்ஜுனா கூறிய நிலையில் தற்போது மேடையில் வைத்தே திருமாவளவனை திமுக கட்சியினர் அவமானப்படுத்தியதாகவும் ஆதாரத்துடன் குற்றசாட்டை முன் வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.